இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்தது வரம்பு மீறிய செயல் என குறிப்பிடுள்ளார்.
கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் தி.மு.க.,வினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதேபோல் தமிழக பாஜக, தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், மறைந்த கருணாநிதியின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புதூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் தி.மு.க., அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்து கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா? எனவும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.