காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர்க்கு இந்தியா கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களிடம் பேசும்போது, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை குறிப்பிட்டு, ஜம்மு-காஷ்மீர் மீதான தனது நாட்டின் நீண்ட கால கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய அரசு, ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் இதில் எந்த சர்ச்சையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என கூறியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், பாகிஸ்தான் தனது ஆக்கிரமிப்பு கருத்துக்களை நிறுத்தி, பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளது.