free website hit counter

கட்சிக் கொடியில் யானை சின்னம் குறித்து பதிலளிக்க தவேக தலைவர் விஜய்க்கு உத்தரவு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழக வெற்றிக் கழகம் கட்சிக் கொடியில் யானை சின்னம் பயன்படுத்துவதற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி அக்கட்சி தலைவர் விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நடிகர் விஜயின் தவெக கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்துடன் இரண்டு யானைகளும், வெற்றியை குறிக்கும் வாகைப்பூவும் இடம்பெற்றுள்ளது. விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய போது அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக தேர்தல்  ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலர் பெரியார் அன்பன் உரிமையையில் நீதிமன்றத்தில், தமிழக வெற்றிக் கழக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கேட்டு வழக்கு தொடர்ந்தார். யானை சின்னத்தை பயன்படுத்துவது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு எதிரானது எனவும் கூறியிருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டு உள்ளது.

இது ஒருபுறம் இருக்க தவெக கொடியையும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொடியையும் அருகருகே வைத்து இருக்கும் வித்தியாசங்களை இணைய வாசிகள் வரிசை படுத்தி வருகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula