வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு இடைக்கால தடை உத்தரவு பிறபித்த உச்சநீதிமன்றத்துக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சிறுபான்மை சகோதரர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம் என தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வக்ஃப் திருத்தச் சட்டம், 2025 ஐ எதிர்த்து திமுக தாக்கல் செய்த மனுவை விசாரித்ததற்கும், வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாக்கவும், வக்ஃப் வாரியங்கள் மற்றும் கவுன்சில்களில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிப்பதைத் தடுக்கவும் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததற்கும் உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி எனவும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
சட்டத்தின் பல பிற்போக்குத்தனமான விதிகளை நீதித்துறை மறுஆய்வு குறைத்ததில் மகிழ்ச்சி எனவும் நாங்கள் முன்னிலைப்படுத்தியது போல, எங்கள் சிறுபான்மை சகோதரர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.