free website hit counter

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக, வரும் 14-ந் திகதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்கவுள்ளதாக தெரிய வருகிறது.

திமுக அமைச்சரவையில் நிதி அமைச்சர் யார் என்று அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகும் முன்பே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. துரை முருகன் நிதி அமைச்சராக இருப்பார் என்றெல்லாம் கூறப்பட்டது.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இனி இலவச தடுப்பூசிகளை வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக உச்ச நிலையில் இருந்த கொரோனா பாதிப்புக்கள் குறைவடைந்துவருகிறது. இன்றைய நிலவரம்படி தினசரி பாதிப்புக்களின் எண்ணிக்கை 1 லட்சமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றுபரவல் வேகத்தில் இந்தியாவில் 3ஆம் இடத்தில் இருந்துவரும் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 3வது இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதிலே முதல் இடத்தில் மாராட்டியமும், இரண்டாவது இடத்தில் கர்நாடகமும், மமூன்றாவது இடத்தில் தமிழகமும் உள்ளதாக அறியவருகிறது.

இந்தியாவிற்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு தடுப்பூசிகளான பைசர் மற்றும் மாடர்னா ஆகிய மருந்துகளுக்கு மத்திய அரசு இழப்பீட்டு காப்பீடு வழங்கக்கூடும் என கூறப்படுகிறது.

மற்ற கட்டுரைகள் …