புதன்கிழமை ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற படகு ஒன்று விபத்தில் சிக்கியதில், பிரிட்டனை நோக்கிப் பயணித்த குறைந்தது 31 பயணிகள் பலியாகி இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
சுவீடனில் பதவியேற்ற பெண் பிரதமர் திடீர் பதவி விலகல்!
புதன்கிழமை சுவீடனில் மக்டேலனா ஆண்டர்சன் என்பவர் முதல் பெண் பிரதமராக பாராளுமன்ற வாக்கெடுப்பின் பின் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
முதல் பெண் பிரதமரை நியமிக்கின்றது சுவீடன் பாராளுமன்றம்!
சுவீடன் பாராளுமன்றம் தனது நாட்டின் நிதியமைச்சரான மகடலேனா அண்டெர்ஸ்ஸன் என்ற 54 வயதாகும் பெண்மணியை அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக நியமிக்க புதன்கிழமை பரிந்துரை செய்துள்ளது.
ஐன்ஸ்டீன் கைப்பட எழுதிய நோட் பாரிஸில் $13 மில்லியன் டாலருக்கு ஏலம்!
கடந்த நூற்றாண்டின் உலகப் புகழ் பெற்ற மிக முக்கியமான இயற்பியலாளர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஆவார்.
அடுத்த வாரம் தாலிபன்களுடன் டோஹாவில் பேச்சுவார்த்தை! : அமெரிக்கா
ஆப்கானில் தாலிபான் போராளிகள் ஆட்சியைக் கைப்பற்றி 100 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், பெரும் உணவுப் பஞ்சத்தில் பொது மக்கள் சிக்கி அங்கு மிகப் பெரும் மனித அவலம் ஏற்பட்டு வரும் நிலையிலும், முதன்முறையாக அமெரிக்கா தாலிபான்களுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.
சூடான் போராட்டம் : பிரதமர் ஹம்டோக்கை மீண்டும் பதவியில் அமர்த்த ராணுவம் திட்டம்
கடந்த மாதம் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியின் போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சூடானின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் அப்தல்லா ஹம்டோக் மீண்டும் பதவியில் அமர்த்தப்படவுள்ளார்.
ஆஸ்திரியாவில் கொரோனா புதிய அலை : கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு
மேற்கு ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் கொரோனா நோய்த்தொன்றின் பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.