இன்று காலை அந்தமான் நிகோபார் தீவில் மூன்று சக்திவாய்ந்த்அ நில அதிர்வுகள் ஏற்பட்டன.
ஆப்கானிஸ்தானின் மூன்று முக்கிய நகரங்களில் தலிபான்கள் தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள மூன்று முக்கிய நகரங்களில் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சோமாலியாவில் பேருந்தில் குண்டு வெடிப்பு! : பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
அண்மையில் சோமாலியாவின் கிஸ்மாயோ என்ற நகரில் காற்பந்து வீரர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் குண்டு வெடித்தது.
அமெரிக்காவில் சர்வதேச மத சுதந்திர தூதராக இந்தோ அமெரிக்கரை நியமித்த பைடென்!
வெள்ளிக்கிழமை இந்திய அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இஸ்லாமியரான றஷாட் ஹுஸ்ஸைன் என்பவரை சர்வதேச மத சுதந்திரத்துக்கான தூதராக அமெரிக்க அதிபர் ஜோ பைடென் நியமித்துள்ளார்.
உலக நாடுகளில் மீண்டும் தலை தூக்கும் கொரோனாவின் டெல்டா மாறுபாடு!
உலகளவில் தற்போது மிக வேகமாகப் பரவி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாட்டின் காரணமாக கோவிட்-19 இற்கு எதிரான போர் திசை திரும்பியிருப்பதாகவும், இதனால் மீண்டும் சுகாதார ஊழியர்களுக்கான கட்டாய தடுப்பு மருந்து முன்னுரிமை மற்றும் பல நாடுகளில் மீண்டும் பொது மக்கள் இடங்களில் முகக் கவசம் அணிதல் ஆகியவை நடைமுறைக்கு வரவேண்டி இருப்பதாகவும் CDC எனப்படும் அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை மீண்டும் முகக்கவசம் அணிய பரிந்துரை
அமெரிக்காவின் கோவிட் - 19 நோய் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மீண்டும் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று உயர் சுகாதார ஆணையம் கூறியுள்ளது.
மொரொக்கோவிற்கு முதன் முதலாக நேரடி விமான சேவை அறிமுகப் படுத்திய இஸ்ரேல் ஏர்லைன்ஸ்
இஸ்ரேலும், மொரோக்கோவும் தமக்கிடையேயான உறவை சுமுகப் படுத்தி ஒரு வருடம் நிறைவடைய உள்ள நிலையில், இரு இஸ்ரேலி ஏர்லைன் சேவைகள் மொரோக்கோவுக்கான தமது முதல் வர்த்தக விமானப் பயணங்களை ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தியுள்ளன.