free website hit counter

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் திரிபின் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகளை டிசம்பர் 20 திங்கள் முதல் சுவிட்சர்லாந்து முழுவதும் அமலுக்கு வரும் என அரசு நேற்று அறிவித்துள்ளது.

ஜேர்மன் சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக், ( Karl Lauterbach ) நேற்று வியாழன் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை, நெருங்கிய குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மட்டும் கொண்டாட வேண்டும் என்று அழைப்பு மக்களுக்கு அறிவித்தார்.

இத்தாலிக்கான பயண விதிகள் இன்று முதல் மாற்றம் பெறுகின்றன. இந்த மாற்றங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வருபவர்களுக்குமானது. இத்தாலிய அரசாங்கம் செவ்வாயன்று இந்தப் புதிய மாற்றங்களை அறிவித்தது. இவைஈன்று வியாழன் காலை முதல் நடைமுறைக்கு வந்தன.

சுவிற்சர்லாந்து கடந்த ஏழு நாட்களில் அதிக புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் உள்ள உலகின் ஐந்தாவது நாடாக தற்போதுள்ளது. சுவிஸ் ஊடகங்களால் சேகரிக்கப்பட்ட எவர் வேர்ல்ட் இன் டேட்டா புள்ளிவிவரங்களின்படி, இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறிச்து வெள்ளிக்கிழமை அரசு அறிவிக்கும் என மத்திய கூட்டாட்சி அரசு திங்களன்று அறிவித்தது.

சுவிற்சர்லாந்து மத்திய அரசாங்கம் சென்ற வெள்ளிக்கிழமை நாட்டின் மோசமான கோவிட் நிலைமையைத் தடுக்க இரண்டு தனித்தனியான நடவடிக்கைகளை முன் மொழிந்துள்ளது.

சுவிற்சர்லாந்து அரசாங்கம் கோவிட் பெருந்தொற்றுத் தொடர்பான தற்போதுள்ள தேவைகளின் விரிவாக்கத்தில் மாநிலங்களுடன் பேசிய பிறகு, பலவிதமான கோவிட் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …