சுவிற்சர்லாந்தும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒருவருக்கொருவர் கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களை இன்று முதல் அங்கீகரிக்கின்றன. இதற்கான உடன்பாட்டினை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
யூரோ - 2020 இறுதிப் போட்டியை நேரில் காண இத்தாலியிலிருந்து வரும் 1000 பேருக்கு மட்டும் அனுமதி !
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யூரோ 2020 இறுதிப் போட்டி இங்கிலாந்தில் வெம்பிளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை நேரில் காண இத்தாலி ரசிகர்கள் பலரும் இலண்டனுக்குப் பயணமாக விரும்பிய போதும், 1,000 ரசிகர்கள் வரை மட்டுமே இத்தாலியில் இருந்து லண்டனுக்கு பயணிக்க முடியும் என்று இத்தாலியின் கால்பந்து கூட்டமைப்பு (FIGC) தெரிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் கொரோனாவின் மூன்றாம் அலை எவ்வாறு ஏற்படும் ?
சுவிற்சர்லாந்தில் நேற்று புதன் கிழமை மட்டும், ஏறக்குறைய 300 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த வார எண்ணிக்கையை விட கணிசமான அதிகரிப்பு எனத் தெரிவிக்கப்படுகிறது.
சுவிற்சர்லாந்தில் புதிய கோவிட் தொற்றுக்கள் ஒரு வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளன !
சுவிற்சர்லாந்தில் ஜுலை முதல்வாரத்தில் கோவிட் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை இரட்டடிப்பாகியுள்ளதாக மத்திய கூட்டாட்சி அரசின் சுகாதார அலுவலகம் அறிவித்துள்ளது.
இத்தாலியில் நடைபெறும் "ஈரோ 2020" போட்டிகளுக்கு இங்கிலாந்திலிருந்து ரசிகர்கள் வரமுடியாது ?
ஐரோப்பிய நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் 'ஈரோ 2020' காற்பந்தாட்டப் போட்டித் தொடர்களின் வரிசையில், எதிர்வரும் சனிக்கிழமை ரோமில் நடைபெறவுள்ள கால் இறுதிப் போட்டியில் உக்ரைனுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடுகிறது.
சுவிற்சர்லாந்தின் தொற்று நோய்க்கு எதிராக மூன்று புதிய திட்டங்கள் !
கொரோனா பெருந் தொற்றுநோயிலிருந்து வெளியேறும் மூலோபாயம் குறித்த ஆவணங்களை இன்று (30 ஜூன் 2021) பிற்பகல் தலைநகர் பேர்ணில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தது. மத்திய கூட்டாட்சி அரச அமைச்சர் அலைன் பெர்செட் இத் திட்டங்கள் குறித்த அறிக்கையை வழங்கினார்.
சுவிற்சர்லாந்தில் இலையுதிர் காலத்தில் கொரோனாவின் நான்காவது அலை ?
சுவிற்சர்லாந்தில் கோவிட் பெருந் தொற்றின் பரவுதல், மருத்துவமனையில் சேருதல் மற்றும் இறப்புகள் ஆச்சரியத்துக்குரிய வகையில், வீழ்ச்சியடைந்துள்ளன. இப் பெருந்தொற்றினை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இப்போது முக்கிய உணர்வாக மக்களிடத்தில் எழுந்துள்ளது.