free website hit counter

சுவிற்சர்லாந்தில் நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசின், அறிவியல் பணிக்குழுவின் துணைத் தலைவர் உர்ஸ் கர்ரர் இன்று ஞாயிற்றுக்கிழமை சூரிச்சில் தெரிவித்தார்.

இத்தாலியின் அனைத்து பகுதிகளும் ஜூன் 28 திங்கள் முதல் சுகாதார நடவடிக்கைகளை மேலும் குறைக்க அனுமதிக்கப்படும் என்பதை இத்தாலியின் சுகாதார மந்திரி ராபர்டோ ஸ்பெரான்சா நேற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினார்.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், ஜூன் 28 முதல் வெளிப்புறங்களில் எல்லா நேரங்களிலும் முகமூடிகளை அணிய வேண்டிய தற்போதையகட்டளையை தளர்த்துவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுவிற்சர்லாந்தின் மத்திய கூட்டாட்சி அரசு, நாட்டில் கோவிட்- 19, தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்த இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலவற்றையும், வரும் 26.06.21 சனிக்கிழமை முதல் தளர்த்துவதாக அறிவித்துள்ளது.

தடுப்பூசிகள் போடப்பட மூன்று முக்கிய நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளை இத்தாலி அனுமதிக்கதொடங்கியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் "கடைகளுக்குள் முகமூடியை விரைவில் அகற்ற வேண்டும் என சுவிஸ் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பெரிய விநியோகஸ்தர்கள் அங்கம் வகிக்கும் வணிக சங்கம், கூட்டாட்சி அரசுக்கு முறையீடு செய்துள்ளது.

இத்தாலியின் இந்த வார சுகாதார தரவு மதிப்பீடுகளைத் தொடர்ந்து, வரும் திங்கட் கிழமை முதல் கொரோனா வைரஸ் தொடர்பான விதிகளை கைவிட இத்தாலியின் சுகாதார அமைச்சகம்அனைத்து பகுதிகளையும் அனுமதித்துள்ளது. ஆயினும் வாலே டி ஆஸ்டா பகுதி இதற்கு விதிவிலக்காகும்.

மற்ற கட்டுரைகள் …