ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு சுமார் 350 காலணிகளை அனுப்பி உள்ளார் அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண்.
முன்னதாக உள்ளூர் மக்களின் நிறை, குறைகளை அறியும் வகையில் இரண்டு நாள் பயணமாக அரக்கு மற்றும் தம்ப்ரிகுடா பகுதிகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டார். அப்போது வயதான பெண்கள் உட்பட
பெரும்பாலானவர்கள் காலணிகள் அணியாமல் இருப்பதை ஜன சேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண் கவனித்தாக தெரிகிறது.
அந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிய கையோடு, அந்தக் கிராமத்தில் வசித்து வரும் அனைவருக்கும் பவன் கல்யாண் காலணிகளை அனுப்பி உள்ளார். மக்களின் குறையை அறிய எந்தவொரு அரசியல் தலைவரும் தங்கள் இருப்பிடத்துக்கு வருவதில்லை என்றும் ஆனால், பவன் கல்யாண் அதை முறியடித்துள்ளார் என கிராம மக்கள்
தெரிவித்துள்ளனர்.