பயங்கரவாதததை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது அவசியம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறி உள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்து ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ராகுல் சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜம்மு காஷ்மீரின் ஒட்டு மொத்த மக்களும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர் என தெரிவித்தார். இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த நாடும் ஒற்றுமையாக இருக்கிறது என்பதை
எல்லோருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன் எனவும் ராகுல்காந்தி அப்போது கூறினார்.
அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையையும் நாங்கள் ஆதரிக்கிறோம் எனவும் சமூகத்தை பிளவுப்படுத்தி, சண்டையிட வைப்பதே தாக்குதலின் பின்னணியில் உள்ள எண்ணம் என கூறிய ராகுல் காந்தி இதை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த சகோதர, சகோதர்களை சிலர் தாக்குவதை பார்ப்பது வருத்தத்தை அளிக்கிறது என்றும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இருந்து, பயங்கரவாதத்தை முற்றிலும் தோற்கடிப்பது முக்கியம் என நான் நினைக்கிறேன் என்றும் ராகுல் கூறினார்.