கோவையில் நடந்த தவெக பூத் கமிட்டி முகவர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.
அப்போது, நாம் அரசியலுக்கு வந்துள்ளது மக்களுக்காகவும் மக்கள் நலனுக்காவும் மட்டும்தான் என அவர் தெரிவித்தார். நம் கட்சி மீது நல்ல நம்பிக்கை கொண்டு வரப்போவது பூத் கமிட்டி முகவர்கள்தான் என்றும் பூத் முகவர்கள் போர் வீரர்களுக்கு சமமானவர்கள் எனவும் விஜய் கூறினார்.
மனதில் நேர்மை, கறை படியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை, லட்சியத்துடன் உழைக்க தெம்பு, பேசுவதற்கு உண்மை, செயல்பட திறமை, அர்ப்பணிப்பு குணம் ஆகியவற்றுடன் களம் தயாராக உள்ளது என்று கூறிய அவர் இதற்கு மேல் என்ன வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு முன்னர் நிறைய பேர் மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்து இருக்கலாம் என கூறிய விஜய், இனிமேல் அப்படி நடக்காது என்று தெரிவித்தார்.