இந்திய வான்வெளி வழியே பாகிஸ்தானுக்கு செல்லும் 25 விமான வழிகளை இந்தியா மூடியுள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, அடுத்த உத்தரவு வரும் வரை, பாகிஸ்தான வான்வெளிக்குள் நுழைய கூடிய 25 விமான வழிகள் மூடப்பட்டு உள்ளன.
இதனால், இந்திய வான்வெளியை பயன்படுத்தி பறக்கும் வெளிநாட்டு விமானங்களும், பாகிஸ்தான் வான்வெளிக்கு செல்லாமல் நீண்ட வழிகளை பயன்படுத்தி, சென்று சேர வேண்டிய இடத்திற்கு செல்லும்.
வெளிநாட்டு விமானங்கள் இந்திய வான்வெளி வழியே சென்று வெளியேறும்போது பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த முடியாது. அதற்கு பதிலாக, வேறு விமான வழிகளை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு நாட்டின் வான்வெளி வழியே பறந்து செல்லும்போது, அதன் விமான போக்குவரத்து கழகத்திற்கு விமான நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.