free website hit counter

சில நாட்களாக நடந்த தொடர் இராணுவ மோதல்களுக்குப் பின் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்கின்றன.

போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களை செயல்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் படங்கள் காட்சிப்படுத்துவதை நிறுத்துமாறு OTT தளங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானை தாயகமாக கொண்ட ஃபவாத் கான், மஹிரா கான், ஹனியா அமீர், அதிஃப் அஸ்லம் உள்ளிட்ட நடிகர்களின் சமூக வலைத்தள கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டது.

பாகிஸ்தான் மற்றும் நேபாள எல்லையை ஒட்டிய மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கிகள் மூலம் இந்தியர்களை மீது குண்டு வீசித் தாக்கியதில் குழந்தைகள் உட்பட 15 உயிரிழந்தனர்.

இந்திய வான்வெளி வழியே பாகிஸ்தானுக்கு செல்லும் 25 விமான வழிகளை இந்தியா மூடியுள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, அடுத்த உத்தரவு வரும் வரை, பாகிஸ்தான வான்வெளிக்குள் நுழைய கூடிய 25 விமான வழிகள் மூடப்பட்டு உள்ளன. 

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகப் பிரிவு காஷ்மீர் பகுதியிலுள்ள  உள்ள ஒன்பது தீவிரவாதிகள் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: