காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜக வை தோற்கடிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
முதல்வரின் பதிலை கேட்கும் தமிழக மக்களின் காதுகள் பாவமில்லையா? - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தமிழ்நாடு முதலமைச்சருக்கு குற்றங்களை தடுக்கும் நிர்வாகத் திறன் என்பது தான் துளியும் இல்லையே? என்று அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டியுள்ளார்.
உயர்கல்வித்துறை பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் - தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்
அறிவியல், தொழில்நுட்பத்தில் உலகம் வேகமாக மாறி வரும் நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக, உயர்கல்வியில் பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றுவது ஒன்றே எல்லாவற்றுக்கும் தீர்வு - சீமான் ஆவேசம்
நெல்லையில் 8ம் வகுப்பு மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான், தீய திராவிட மாடல் தி.மு.க., ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வு எனக் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில், பணமோசடி வழக்கில் இந்தியாவின் காந்தி குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது
இந்தியாவின் நிதிக் குற்றவியல் நிறுவனம் மூத்த தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தி மற்றும் பலர் மீது பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டியதை அடுத்து, புதன்கிழமை நாடு தழுவிய போராட்டங்களை நடத்தப் போவதாக இந்தியாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு எதிராக டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
நடிகர் கேப்டன் விஜயகாந்தை புகழ்ந்த இந்திய பிரதமர்
தேமுதிக நிறுவனரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.