புதுடெல்லி: காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தியில், இந்தியா 3ஆம் இடத்துக்கு முன்னேறியது. கடந்த 5 ஆண்டுகளில் இத்துறையில் அதன் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரித்துள்ளது.
மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு தமிழக அரசுமரியாதை !
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். அவருக்கு வயது 93.
பொய் வாக்குறுதி தருவதாக மத்திய மாநில அரசுகள் மீது விஜய் குற்றச்சாட்டு
இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் பொய் வாக்குறுதிகளை தருவதாக, தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டி உள்ளார். இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - இல்லத்தரசிகள் கவலை
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரி உயர்த்தப்பட்ட நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு சட்ட விரோதம் : இந்திய உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
சென்னை: தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை; 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதம் என்று, இந்திய உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது.
சொந்த மாநிலத்தில் வேலையை தேடுங்கள் : ராகுல் காந்தி அறிவுரை
பீகார் இளைஞர்கள் வேலை தேடி வெளியே செல்லக்கூடாது ; சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பெகுசராய் நகரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியிலும் பங்கேற்றார்.
தமிழ்நாடு அமைச்சரின் உறவினர்கள் வீடுகளில் அதிகாரிகள் சோதனை
தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த அமைச்சர் கே.என். நேருவின் மகன், உறவினர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.