website analysis

தமிழ்த்திரையுலகின் முக்கிய நட்சத்திரமான நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் முக்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக இத் திருமணம் நடைபெற்றது.

இருவீட்டாரின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்த அழகான இளம் ஜோடி நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை தனியார் ஹோட்டலில் நடந்தது.

இதுவரை 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' ஆகிய படங்களில் அஜித்தை இயக்கினார் ஹெச்.வினோத். தற்போது, போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் அவருடைய 61வது படத்திற்காக மூன்றாவது முறையாக இந்த மூவரும் இணைந்திருக்கிறார்கள்.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்தமாதம் வெளியான படம் 'பீஸ்ட்'. முதலில் திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது நெட்பிளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஆகிய ஓடிடி தளங்களிலும் வெளியாகியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்தவர்கள் அடுத்தடுத்து வெளியேறியது என கமல் கடும் நெருக்கடியில் இருந்தபோதும், தன்னுடைய களமான சினிமாவில் மீண்டும் முழு வீச்சில் இறங்கி ‘விக்ரம்’ படத்தை நடித்து தயாரித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சிம்புவுடன் ‘குத்து’ படத்தில் நடித்து அசரடித்தவர் ரம்யா. அதனாலேயே தமிழ் ரசிகர்கள் அவரைக் குத்து ரம்யா என்று அழைத்து வருகின்றனர். ஆனால் இவரது முழுப் பெயர் திவ்யா ஸ்பந்தனா.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் 13-ஆம் தேதி ‘டான்’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் அடுத்து ரஜினி தன்னுடைய 169-வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.

மாரி 2 படத்தில் ‘ரவுடி பேபி’ பாடலுக்குப் பிறகு தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரம் ஆனார் சாய் பல்லவி. நானி ஜோடியாக ‘சியாம் சிங்கா ராய்’ படத்தில் அட்டகாசமான நடிப்பையும் நடனத்தையும் கொடுத்து மேலும் புகழ் பெற்றார்.

More Articles …