சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன் என்றும் சின்னம் கிடைத்தவுடன் களத்தில் இறங்கி விடுவேன் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா விசா ரத்து விவகாரம்- இந்திய மாணவர்கள் பாதிப்பு
அமெரிக்காவில் விசா ரத்து செய்யப்பட்ட சர்வதேச மாணவர்களில் 50 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
ஒரு கிராமத்துக்கே காலணிகள் வழங்கி அசத்திய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு சுமார் 350 காலணிகளை அனுப்பி உள்ளார் அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண்.
மத்திய அரசுக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது - முதலமைச்சர் ஸ்டாலின்
டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது என்றும் மற்ற மாநிலங்களைப் போல ரெய்டுகளால், கட்சிகளை உடைக்கும் பாஜகவின் பார்முலா தமிழகத்தில் நடக்காது எனவும் கூறியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசு ஏற்படுத்தும் தடைகளை சட்டபூர்வமாக ஒவ்வொன்றாக உடைப்போம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்
காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர்க்கு இந்தியா கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
பிரியங்காவுடன் ராபர்ட் வாத்ரா ஆஜர் - 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை
குருகிராம் நில வழக்கு தொடர்பாக தொழிலதிபர் ராபர்ட் வாத்ரா, தனது மனைவியும், வயநாடு எம்.பி.,யுமான பிரியங்காவுடன் வந்து அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.
கலைஞர் சமாதி அலங்காரம் - தமிழக பாஜக கடும் கண்டனம்
இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்தது வரம்பு மீறிய செயல் என குறிப்பிடுள்ளார்.