கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
கரூர் கூட்டநெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய அரசுப் பணி ஆணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்தது.
Teline V
Best News Template For Joomla
கரூர் கூட்டநெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய அரசுப் பணி ஆணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்தது.
இந்திய மத்திய அரசுப் பிரதிநிதிகள் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) பிரதிநிதிகள் குழுக்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து, புது தில்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு மன்றத்தில் இரு தரப்பினரும் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், போராட்டம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய தொடர் போரட்டம் மாணவர்களின் போராட்டமாக உருவெடுத்து நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், போராட்டக்காரர்களின் முதலாவது கோரிக்கையை ஏற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார்.
நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் இரட்டை வேடம் போடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தலைநகர் தில்லியில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தவெக தெரிவித்துள்ளது.
நீட் முறைகேடுகளைக் கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி தில்லி ஜந்தர் மந்தர் திடலில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நேற்றுமுன்தினம் (ஜூலை 20) பேரணி சென்றனர்.
நாடாளுமன்ற சாலையில் நுழையும்போதே, காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். மாணவர்கள், பெண்கள் உள்பட பலரின் மீதும் தடியடி நடத்தினர். இதில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், தொடர்ந்து நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலர்கள் பிரியங்கா, கே.சி. வேணுகோபால், கேரள முதல்வர் வி.டி. சதீசன், கர்நாடக முதல்வர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரதமர் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவரின் இல்லத்தை முற்றுகையிடும் வகையில் பேரணி செல்ல முயன்றதால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரைக் காவல் துறையினர் கைது செய்தனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரிடம் கடுமையாக நடந்துகொண்ட காவல் துறை அதிகாரிகள் அவர்களை வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக வாகனங்களில் ஏற்றினர்.
இந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தப் பதிவில், “தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும்.
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வு நடைமுறைபப்டுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத் தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது.
நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இணையதளம் குறித்து மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முதல்வர் ஜோசப் விஜய் நேற்று வெளியிட்ட விடியோ ஒன்றில், அவரது மேஜையிலுள்ள புனித சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து சிலை, சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியிருக்கிறது.
வந்தே மாதரம் பாடலை அவமதித்தாலோ, இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டாலோ 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவை ,நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்கிறது.