free website hit counter

 கச்சத்தீவு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரை, இடைக்காலத் தீர்வாக அதனை 99 ஆண்டுகளுக்கு  குத்தகையாகப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக, அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், சாலை விபத்துகளால் ஏறத்தாழ 1.8 லட்சம் பேர் உயிரிழப்பதாக  மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தரும் போது, ​​பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-இலங்கை நட்புறவை இலங்கையும் இந்தியாவும் மறுபரிசீலனை செய்யும் என்றும், ஒத்துழைப்பின் புதிய வழிகள் குறித்து விவாதிக்கும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சென்னை:  இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை இந்திய அரசு இந்தியா மீட்க வேண்டும் என்று, தமிழ்நாடு சட்டசபையில் புதனன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுடெல்லி:  இந்திய நாடாளுமன்றத்தின்  மக்களவையில், எதிர்க்கட்சிகளில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், வக்பு திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேறியது. ஆதரவாக 288, எதிராக 232 பேர் வாக்களித்தனர். 

கச்சத்தீவை இலங்கையிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக மற்றும் பாஜக எதிர்க்கட்சிகளும் இந்த தீர்மானத்தை ஆதரித்தன.

மற்ற கட்டுரைகள் …