மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் ATM-களில் போதுமான அளவு விநியோகிக்கப் படுவதை உறுதி செய்திட வேண்டும் என வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
24-36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை
அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் ராணுவத் தாக்குதலை நடத்த இந்தியா உத்தேசித்துள்ளதாக நம்பத்தகுந்த உளவுத்துறையிடம் பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் புதன்கிழமை தெரிவித்தார்.
2026-ல் ஒரே வெர்ஷன் அதிமுகதான் - எடப்பாடி பழனிசாமி
2026-ல் ஒரே வெர்ஷன்தான்; அது அதிமுக வெர்ஷன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
‘முப்படைகளுக்கும் முழு சுதந்திரம்’ - இந்திய பிரதமர் மோடி
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட குழு கூட்டத்தில் பிரதமர் மோடி அதனை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
“ரேஷன் கடைகளில் எத்தனை ஆண்டுகளாக நடக்கிறது கலப்படம்?” - சீமான் சரமாரி கேள்வி
ரேஷன் கடைகளில் கலப்படப் பொருட்களை வழங்கி மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எக்காரணம் கொண்டும் மதவாதம் நுழையாது - தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உறுதி
காஷ்மீர் பிரச்சினையைப் பொறுத்தவரையில் மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் தமிழ்நாடு நிச்சயமாக உறுதுணையாக இருக்கும் என்றுதான் நாங்கள் கூறியிருக்கிறோம் என குறிப்பிட்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், எந்த காரணத்தைக் கொண்டு தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மதவாதம் உள்ளே நுழைய முடியாது என்று
தெரிவித்தார்.
பிரதமர் மோடி இல்லையென்றால் வேறு யார்? - இசையமைப்பாளர் இளையராஜா புகழாரம்
ஒருவேளை நமக்கு பிரதமர் மோடி தேவை இல்லையென்றால், அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறு ஒரு தலைவரின் பெயரை சொல்லுங்கள் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.