In The Spotlight
ஜுன் மாதத்திற்குரிய பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளினடிப்படையிலும், கிரகநிலைகளினடிப்படையிலும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.
-
சுவிற்சர்லாந்தின் பாசல் நகரில் வசந்தகாலத்தின் தொடக்கத்தில் நடைபெறும் களியாட்டவிழா வரலாற்றுச் சிறப்புமிக்கது. அந்த அழகிய விழா தொடர்பான ஒரு சிறப்பான இந்தக் கானொளித் தொகுப்பினை 'மகிழம்' கலையகம் படைத்திருக்கிறது.
-
நோர்வே கலா சாதனா கலைக்கூடம் தொடங்கப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடுமுகமாக, " யாதும் ஊரே ! யாவரும் கேளீர் ! " எனும் கனியன் பூங்குன்றனாரின் வரிகளை பரதமும், பல்வகை நடனங்களும் கொண்டு புத்தாக்கக் கானொளியாகப் படைத்திருக்கிறார்கள். மிகச் சிறப்பான நடன அமைப்புக்களுடனும், தரமான காட்சிப்பதிவுகளுடனும், அமைந்திருக்கிறது இக் கானொளி நடனமும், பாடலும்.
-
கொரோனா தொற்று எப்போது முடியும் ? Please Subscribe to 4TamilMedia Channel & Support Us :) https://bit.ly/3agyZAJ 4தமிழ்மீடியாவிற்கு சப்ஸ்கிரைப் செய்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் https://bit.ly/3agyZAJ
கொரோனா தொற்று எப்போது முடியும் ? என்பது இன்று எல்லோரிடமும் உள்ள கேள்வி. அது எப்போது முடியும்? எவ்வாறு முடியும்? என்பதனை வரலாற்றின் பக்கங்களிலிருந்து பெறும் ஆதாரக் குறிப்புக்களுடனான ஒரு விரிவான பார்வை இது.
-
4தமிழ்மீடியா இணையத்திலும், உங்கள் இதயங்களிலும் இணைந்தது 2008 ஆகஸ்ட் 14. 12 ஆண்டுகள் கழிந்து தொடரும் பயணம் இது..
Top Stories
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக பதவி ஏற்கப்போகிறார் எனும் தகவல் அண்மைக்காலமாக அடிக்கடி பரவி வருகின்றது. கடந்த வாரத்தில், பதவி ஏற்பதற்காக அவர் தன்னுடைய வீட்டிலிருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி புறப்பட்டுவிட்டார் என்பது வரையில் வதந்தி பரவியது. இந்த வதந்தி பரவிக் கொண்டிருந்த போது, அவர் மாத்தறையில் ஒரு குடும்ப நிகழ்வில் பங்குபற்றிக் கொண்டிருந்தார். ஆனால், மஹிந்த மீண்டும் பிரதமராக பதவி ஏற்கப்போகிறார் என்ற தகவல்கள் அடிக்கடி வெளியாவதன் பின்னால், வதந்தியைப் பரப்புவர்களைக் காட்டிலும், மஹிந்த வாதிகளே அதிகம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் முடிவைச் சந்தித்து இன்றோடு பதினான்கு ஆண்டுகளாகின்றன. எட்டு தசாப்தங்களை எட்டிக் கொண்டிருக்கும் சுயநிர்ணய உரிமைக்கான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் என்பது எழுச்சிக்கும் வீழ்ச்சிக்குமான அடையாளக் களம்.
உயிர் வாழ்வதற்கு இரத்தம் இன்றியமையாதது என்றும், இரத்த தானம் செய்வதால் உயிர்கள் காப்பாற்றப்படும் என்று கூறுவதும் சாதாரணமானது. உலக சுகாதார நிறுவனம் இரத்த தானம் என்பதனை மற்றுமொரு நபருக்குக் கொடுக்கும் விலைமதிப்பற்ற பரிசு என்று கூறுகிறது. அவ்வாறிருக்கும் போது ஏன் இத்தகைய தாராள பண்பினை பாகுபாட்டிற்கும், களங்கத்திற்கும் உள்ளாக்க வேண்டும்?
மனித உரிமைகளை மீறும் அன்னிய கலாச்சார மற்றும் ஒழுக்க நெறிமுறைகள் ஒருவரின் சொந்த சட்டமாகவும் நம்பிக்கையாகவும் மாற முடியுமா? உண்மையாக 1841ஆம் ஆண்டின் அலைந்து திரிவோர் கட்டளை சட்டம் (Vagrants Ordinance of 1841) மற்றும் ஒரே பாலினத்தவர்களுக்கு இடையிலான ஒப்புதலுடன் கூடிய பாலியல் உறவுகளை குற்றமாக்கிய 1883ஆம் ஆண்டின் தண்டனை சட்டக்கோவை (Penal Code of 1883) ஆகிய “விழுமிய சட்டங்களை” அறிமுகப்படுத்தியன் ஊடாக பிரித்தானிய காலனித்துவம் இலங்கைக்கு பரிசளித்தது இதுவேயாகும்.
வவுனியா, ஒலுமடு வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிவலிங்கம் உள்ளிட்ட விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் தொன்ம வழிபாட்டிடங்களில் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் முக்கியமானவர்.
வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பிலான நடவடிக்கைககளில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டிருக்கின்றது. இந்திய மீனவர்களின் 50 குதிரை வலுவுக்கும் குறைவான இயந்திரப் படகுகளை வாரத்தில் இரண்டு நாட்களுக்கு வடக்கு கடலில் மீன்பிடிக்க அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டு, அதனை செயற்படுத்தும் வேலைகளில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டு வருகின்றார்.
Top Stories
இந்த வருட Vision du Reel சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில், என்னை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கிய இன்னும் சில ஆவண குறுந்திரைப்படங்கள் மற்றும் மைய நீளத் திரைப்படங்களை பற்றி தொடர்ந்து எழுதவிருக்கிறேன். சினிமா ஒன்றை இப்படித்தான் செய்ய வேண்டும் எனக் காலம் காலமாக எழுதப்பட்டு வந்த பல விதிமுறைகளை உடைத்தெறிந்து புதிய வடிவங்களை தேடி நகரும் படங்கள் இவை.
பொன்னியின் செல்வனின் பாகம் 1 வெளியாகி ஏழு மாதங்களுக்குப் பின் அதன் தொடர்ச்சியான பாகம் 2 பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரைக்கு வந்துள்ளது.
ஆவணத்திரைப்படத்தின் கூறுகளில் புனைவின் இடமென்ன?. இம்முமுறை சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவான Visions du Reel ல் கலந்து கொண்ட போது என்னுள் எழுந்த கேள்வி இது.
பார்வைகள்
“…நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது…!”
நயினாதீவு நாகவிகாராதிபதி செவ்வியொன்றிலே "சிங்கள பௌத்தம், தமிழ் பௌத்தம் என்றில்லை. பௌத்தம் என்பது ஒரு சமயமே இல்லை. புத்தர் ஒரு இந்துவாக இருந்து தோற்றுவித்த சிந்தனைக் கோட்பாடே பௌத்தம்" என்று தெளிவாகச் சொல்கின்றார்.
கஞ்சி தானிய அரிசி வகைகளில் தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம். இது ஒரு ஆரோக்கியமான உணவு என்பதனாலும், சீக்கிரமாக செரிமானம் பெற்றுவிடக் கூடியதும் என்பதனாலேயே பெரும்பாலும் நோய்வாய்ப்பட்ட நபர்களுக்கான உணவாக பரிந்துரைக்கப்படுகிறது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் (16.04.2023 ) நடைபெற்ற மான்செஸ்டர் மரத்தான் ஓட்டப் போட்டியில் சேலை அணிந்து ஓடிய இந்தியப் பெண்மணி பலரது கவனத்தையும் பாராட்டினையும் பெற்றுள்ளார்.
அகம், அகிலம், அகத்தில் நிறை மகளிருக்கு !
வாசகசாலை
முயலும் ஆமையும் எனும் சிறுபராய கதைசொல்லிகள் வழி ஆமை ஒரு வேகம் குறைந்த பிராணி என்றே அறியத்தொடங்கியிருக்கிறோம். ஆனால் பூமியில் உயிரினங்களான டைனோசர் தோன்றிய காலத்திலிருந்து எம்மோடு இன்று வரை ஆமைகள் வாழ்ந்து வருகின்றது என்றால் அதிவேகம் அவசியம்தானா ?
ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் இன்றைய திகதியில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனாலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு திகதிகளில் இது கொண்டாடப்படுகிறது.
நாச்சிமார்கோவிலடி கண்ணன். ஒரு காலத்தில் அப்படிச் சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் பின்னாளில் அவர் இசைவாணர் கண்ணனாக, கண்ணன் மாஸ்டராக வளர்ந்தார்.
கடலில் பயணிப்பவர்களுக்கு கடவுளின் கருணை ஒளிபோல இரளைக்கிழித்துக் காட்சி தருபவை கலங்கரை விளக்க வெளிச்சங்கள். கலங்கரைவிளக்கங்கள் மீதான தீராக்காதல் எம் சொந்த மண்ணிலிருந்து தொடங்கியது.
அயோத்தி என்னும் தலைப்பில், அருமையான மனிதத்துவத்தைப் பேசியிருக்க்கும் இத் திரைப்படத்தினைப் பார்த்த கணத்திலிருந்து அந்த இரு பிள்ளைகளின் முகங்களும், பரிதவிப்பும், நினைவுகளில் அகல மறுக்கிறது.
வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியானது ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. அன்றைய நாளில் விசாக நட்சத்திரமும் கூடி வர வைகாசி விசாகம் எனச் சிறப்புப் பெறும்.
ஜப்பான் கடற்கரையில் 8,336 மீட்டர் (27,329 அடி) உயரத்தில் உள்ள இசு-ஒகசவாரா அகழியின் ஆழத்தில் வாழும் உலகின் மிக ஆழமான மீனைப் படம்பிடித்து விஞ்ஞானிகள் குழு சாதனை படைத்துள்ளது.
தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் பாடலாக வைகைப்புயல் வடிவேலு அவர்கள் பாடிய பாடல் மாறியுள்ளது. அதுவும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இப்பாடலை உருகும் குரலில் பாடியுள்ளதால் அனைவரையும் கவர்ந்துவருகிறது.